பலுகஸ்வெவ பகுதியில் குழந்தையை கொலை செய்த தாய் கைது

Published By: Digital Desk 3

18 Jan, 2025 | 08:55 AM
image

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத குழந்தையை கொலை செய்த தாய் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பகுதியில் வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும்,  இரவு குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். 

புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23
news-image

கூட்டுறவு முறைமையை சந்தையில் தீவிரமாகச் செயற்படும்...

2026-08-14 19:19:15
news-image

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பல கோடி...

2026-08-14 18:21:34
news-image

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப்...

2026-08-14 17:51:55
news-image

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத்...

2026-08-14 18:28:53
news-image

எம் இனத்துக்கு எதிரான இனப்படுகொலைகள் அனைத்துக்கும்...

2026-08-14 18:25:58
news-image

அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய...

2026-08-14 17:19:31
news-image

2026ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தளத்துக்கான வெள்ளி...

2026-08-14 18:15:45
news-image

திருமண விழா முடிந்து திரும்பியபோது வெயங்கொடையில்...

2026-08-14 17:41:42
news-image

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத்...

2026-08-14 19:30:43