ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

Published By: Vishnu

17 Jan, 2025 | 09:35 PM
image

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தும் கோரப்பட்ட போது, உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதன்போது தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு சுவிட்சிடம்...

2025-02-12 10:22:56
news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-02-12 10:12:15
news-image

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

2025-02-12 10:15:09
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46