(நெவில் அன்தனி)
மேல் மாகாண வலைபந்தாட்ட சங்கத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட 30ஆவது ஈவா கிண்ண அகில இலங்கை மற்றும் பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் விமானப்படை இரண்டு பிரிவுகளில் சம்பியனானது.
பாடசாலைகள் பிரிவில் தெஹிவலை பிரெஸ்பிட்டேரியன், கொழும்பு சுஜாதா வித்தாயாலயம், குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி ஆகியன சம்பியனாகின.
கொழும்பு விமானப்படை வளாகத்தில் அமைந்துள்ள ரைப்ள் க்றீன் மைதானத்தில் இப் போட்டி நடத்தப்பட்டது.
பெண்களுக்கான ஏ பிரிவு இறுதிப் போட்டியில் குருநாகல் நெட் சாம்ப்ஸ் அணியை 39 - 19 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு விமானப்படை சம்பியனானது.
ஆண்களுக்கான ஏ பிரிவில் கேகாலை லயன்ஸ் அணியை 23 - 21 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட நீர்கொழும்பு யுனைட்டட் அணி சம்பியனானது.
பி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் விளையாட்டுக் கழக அணியிடம் கடும் சவாலை எதிர்கொண்ட விமானப்படை பி அணி 12 - 7 என வெற்றிபெற்று சம்பியனானது.
இப் பிரிவில் திறமையாக விளையாடிய யாழ்ப்பாணம் விளையாட்டுக் கழக அணி, கால் இறுதியில் ஹெவன் ரோசஸ் அணியை 13 - 3 எனவும் அரை இறுதியில் டீம் ப்ளேஸ் அணியை 24 - 12 எனவும் இலகுவாக வெற்றிகொண்டது.
பாடசாலைகள் பிரிவு
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறுதிப் போட்டியில் பாதுக்க சிறி பியரத்தன வித்தியாலயத்தை 18 - 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பிரெஸ்பிட்டேரியன் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை சூடியது.
17 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறதிப் போட்டியில் பன்னிபிட்டி தர்மபால வித்தியாலயத்தை எதிர்த்தாடிய சுஜாதா வித்தியாலயம் 22 - 13 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
15 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறுதிப் போட்டியில் பாதுக்க சிறி பியரத்தன வித்தியாலயத்தை சந்தித்த குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயம் 21 - 10 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.
இந்த சுற்றுப் போட்டியில் வலைபந்தாட்ட இராணியாக 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றிய சுஜாதா வித்தியாலய வீராங்கனை மிஹிதுமி கீர்த்திசிறி முடிசூட்டப்பட்டார். வலைபந்தாட்ட மன்னனாக யுனைட்டட் கழக வீரர் பாரத ரணதுங்க தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM