(நெவில் அன்தனி)
இலங்கை டென்னிஸ் சங்க களிமண்தரை அரங்கில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சம்மேளன ஆசிய 14 வயது மற்றும் 14 வயதுக்குட்பட்ட அபிவிருத்தி சம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் சிறுமிகளுக்கான இரட்டையர் பிரிவில் இலங்கையின் அனன்யா நோபட் - சஹன்சா தம்சிலுனி ஜொடியினர் சம்பியன் பட்டத்தை சூடினர்.
பிலிப்பைன்ஸின் பக்லாலுனான் எல்லா - டொரேபெம்ப்போ மாரிஸ் ஸ்டெல்லா ஜோடியினரை நேற்று நடைபெற்ற சிறுமிகளுக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட அனன்யா நோபட் - சஹன்சா தம்சிலுனி ஜோடியினர் 2 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனாகினர்.
முதலாவது செட்டில் மிகத் திறமையாக விளையாட்டிய இலங்கை ஜோடியினர் 6 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றனர்.
ஆனால், இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த பிலிப்பைன்ஸ் ஜோடியினர் 6 - 2 என வெற்றிபெற்று செட் நிலையை சமப்படுத்தி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர்.
தீர்மானம் மிக்க 3ஆவது செட்டில் சிறந்த நுட்பத்திறனுடனும் சாதுரியத்துடனும் விளையாடிய அனன்யாவும் சஹன்சாவும் இறுதியில் 10 - 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகினர்.
சிறுமிகளுக்கான ஒற்றையர் பிரிவில் நேபாளத்தின் குருங் ஷிவாலியிடம் 2 நேர் செட்களில் தோல்வி அடைந்த அனன்யா நோபட் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
சிறுவர்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் ஜோடியினரான நிக்கலஸ் மிங் - டே மெத்யூ ஆகியோரிடம் இலங்கை ஜோடியினரான தம்சத் பீரிஸ் - யுதிரிய அத்தபத்து ஆகியோர் 2 நேர் செட்களில் தோல்வி அடைந்தனர்.
சிறுவர்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியிலும் இலங்கைக்கு தோல்வியே மிஞ்சியது.
பாகிஸ்தான் வீரர் முஹம்மத் ஷயானிடம் இலங்கை வீரர் தம்சத் பீரிஸ் 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM