இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமத்தை இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 24 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி துணை அமைச்சர் டி.பி. சரத், தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம் இந்திய அரசின் மானிய நிதி உதவியின் கீழ் இலங்கையின் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்துடன் இணைந்து தீவின் 25 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் 2017 ஆண்டு ஒக்டோபர் மாதம் கையெழுத்திடப்பட்டது.
இந்தத் திட்டம் இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அநுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டுக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM