(என்.வீ.ஏ.)
இளம் பெட்மின்டன் வீரர்களின் பெட்மின்டன் நுட்பத்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு பண்டாரவளை சென் தோமஸ் கல்லூரியின் கெப்ள் ஞாபகார்த்த மண்டபத்தில் பெட்மன்டன் பயிற்சி அளிக்கப்பட்டது.
கனடாவில் வாழ்ந்துவரும் பிரபல பெட்மின்டன் பயிற்றுநர் பியூமிக்கா பெர்னாண்டோ இந்தப் பயிற்சித் திட்டத்தை நடத்தினார்.
சென் தோமஸ் கல்லூரியில் பெட்மின்டன் விளையாட்டில் ஈடுபடும் இளம் வீரர்களுக்கும் ஆர்வம் உள்ள ஆரம்பவியலாளர்களக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரும் சர்வதேச பெட்மின்டன் பயிற்றுநர் சான்றிதழ் கொண்டவருமான தர்ஷன பெர்னாண்டோ இப் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்து தனது மகள் பியூமிக்கா மூலம் நடத்தினார்.
சென். தோமஸ் கல்லூரியில் வருடாந்த பயிற்சிகளை தர்ஷன பெர்னாண்டோவே முன்னின்று நடத்துவார். ஆனால், இம்முறை அவர் தனது மகள் மூலம் இந்தப் பயிற்சியை நடத்தினார்.
ரெக்ல்டன் என அழைக்கப்படும் ரெக்கட்டினால் விளையாடப்படும் நான்கு கலவை போட்டியில் முன்னாள் உலக சம்பியனான பியூமிக்கா, கனடாவில் இயங்கும் இளையோர் பெட்மின்டன் பயிற்சிகயத்தில் பிரதி தலைமைப் பயிற்றுநராக பணியாற்றுகிறார்.
ரெக்ல்டன் விளையாட்டில் பெட்மின்டன், ஸ்கொஷ், மேசைப்பந்தாட்டம், டென்னிஸ் ஆகிய நான்கு விளையாட்டுக்கள் அடங்குகின்றன.
பெட்மின்டன் விளையாட்டில் வெற்றி பெறும் உத்திகள், உபாதைத் தடுப்பு, மறுவாழ்வு, உயர்தர பயிற்சி நுட்பங்கள் ஆகியன தொடர்பான ஆலோசனைகளும் இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தின்போது பியூமிக்காவால் வழங்கப்பட்டது.
தந்தையைப் பின்பற்றி பெட்மின்டன் விளையாட்டில் ஈடுபட்ட பியூமிகா, 2ஆம் நிலை கனேடிய தேசிய சான்றிதழ் கொண்ட பயிற்றுநராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM