(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற இல்லம் கட்டிட தொகுதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரமத நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி மூர்து பெர்னாந்து, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று காலை இடம்பெறவுள்ளது.
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருந்துவரும் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகம் 1988ஆம் ஆண்டு நன்கொடையாக சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகம் பரந்தளவில் நவீனப்படுத்துவதற்கும் அதற்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் நிதி வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மக்கள் சீன குடியரசு இலங்கை அரசுடன் 2016ஆம் ஆண்டும் இணங்கியது.
அதன் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தொடர்புடைய ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை 2021 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி மக்கள் சீன குடியரசின் வணிக அமைச்சு. இந்த நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்றது.
குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய சீன அரசாங்கத்தின் 240 மில்லியன் யுவான் ஒதுக்கீட்டின் கீழ் உயர்நீதிமன்ற வளாகத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கை 2023 ஏப்ரல் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற வளாகத்தின் அடிப்படை தோற்றத்தை பாதுகாத்துக்கொண்டு அதன் கட்டமைப்பு மாறாத வகையில் நவீனப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுவதே இலட்சியமாகும் என நீதி அமைச்சு விடுத்துள்ள அறி்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM