கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வந்திறங்கிய பாகிஸ்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய ஒரு விமானத்தில் பயணித்ததாகவும், அவரைச் சோதனையிட்டபோது அவரிடம் 1.36 கிலோ பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் சந்தைப் பெறுமதி சுமார் பதினான்கு மில்லியன் ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.