இரத்மலானை, லுணாவ கால்வாய் திட்டத்திற்கு சொந்தமான விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதை கண்டு, உடனடியாக கல்கிசை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சடலமானது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் கல்கிசை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM