மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை அரசு மீள் பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (17) பொது மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு விவசாய சம்மேளனம் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னால் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்ததையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியான்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை அமுல்படுத்து, யு.என்.எச்.சி.ஆர். அப்பாவி மியான்மார் அகதிகளை பொறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பராப்படுத்து, மியான்மாரில் மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியை கிளப்பாதே, போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM