நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Digital Desk 2

17 Jan, 2025 | 03:33 PM
image

சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான லாபகரமான நடிகராக திகழும் அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜு சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள் ' எனும் திரைப்படத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், சந்தோஷ் சுவாமிநாதன் , ஈஸ்வரி , நீலா கருணாகரன், சுல்பியா, மஜீத் , இன்பரசு, பக்தவல்சலன், அமித் மாதவன் ,  விபின் தேவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ராஜு சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி,  நவநீத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேண்டஸி டிராமா ஜேனரிலான இந்த திரைப்படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் ராஜு சந்திரா தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராமத்துப் பின்னணியில் இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்தினை விவரித்திருக்கிறோம். இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளை பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right