வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் படத்தின் டீஸர் வெளியீடு

Published By: Digital Desk 2

17 Jan, 2025 | 03:31 PM
image

நட்சத்திர வாரிசு நடிகையும் , சர்ச்சைக்குரிய நடிகையுமான வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநரும், நடிகருமான றொபட் இணைந்து தோன்றும் ' மிஸஸ் & மிஸ்டர் 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் ' மிஸஸ் & மிஸ்டர் ' எனும் திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் , றொபட்,  பாத்திமா பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன், கணேஷ் , ஆர்த்தி , ஸ்ரீமன் , ஷகிலா , அனு மோகன்,  கும்தாஜ் , செஃப் தாமு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் , ராகபாண்டி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் வனிதா விஜயகுமாரும்,  றொபட் மாஸ்டரும் கணவன் மனைவியாகவும்,  நாற்பது வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவும் இருப்பதால் இந்த டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right