வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

Published By: Digital Desk 2

17 Jan, 2025 | 05:01 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் பணம் இருந்தால் உலகத்தில் வாழலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள். வேறு சிலர் எந்த பிரச்சனையையும் பணம் இருந்தால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம் என்றும் கருதுகிறார்கள். 

இதனால் பண வரவு தொடர்பான எம்முடைய ஆன்மீக முன்னோர்களின் குறிப்புகளை தொடர்ச்சியாக பின்பற்றவும், உறுதியாக கடைப்பிடிக்கவும் தயாராகிறார்கள்.  அதனால் பண வருவாயை அதிகரிப்பதற்கான சூட்சமமான சில குறிப்புகளையும் எம்முடைய முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள் அதனை தொடர்ந்து காண்போம்.

நாளாந்தம் காலையில் நீராடிய பிறகு பூஜை அறையில் இறைவனை வணங்குவதற்கும் முன் மறவாமல் ஒரே ஒரு சந்தன வாசம் மிக்க ஊதுபத்தியை ஏற்றுங்கள். மேலும் அந்தத் தருணத்தில் உங்களுடைய நெற்றியில் சிறிதளவு சந்தனத்தை பூசி கொள்ளுங்கள். 

சந்தன வாசம் உங்களுடைய பூஜை அறையின் உள்ள காற்றில் பரவும் போது நேர் நிலையான ஆற்றல்கள் அதிகரித்து தன வசியத்தை உருவாக்கி தன வரவை ஏற்படுத்தும். இதற்கு முன் உங்களது வீட்டில் வேறு வாசனை மிக்க ஊதுபக்திகளை ஏற்றி இருந்தாலும் அவை நிறைவடைந்த பிறகு மறவாமல் சந்தன வாசம் கொண்ட ஊதுபத்தியை வாங்கி, அதனை நாளாந்தம் ஏற்றுங்கள். வாழ்வில் மாற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம். குறிப்பாக தன வரவில் மாற்றம் ஏற்படுவதை காணலாம்.

இந்த சூட்சமமான வழிமுறையை பின்பற்றியும் தன வரவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று காலையில் சுக்கிர ஹோரை எனக் குறிப்பிடப்படும் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாக கனகதாரா ஸ்தோத்திரம் எனும் மந்திரத்தை ஆறு முறை உச்சரிக்க வேண்டும்.

இதனுடன் நீங்கள் வணங்கும் மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் அல்லது ஜவ்வரிசி பாயாசத்தை நிவேதனமாக படைத்து வணங்க வேண்டும். பிறகு அதனை பசியாறலாம். இதனைத் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு உச்சரித்து வந்தால் தன வரவில் மாற்றம் ஏற்படுவதை அனுபவபூர்வமாக உணரலாம்.

சிலருக்கு இதில் கூட எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு கிடைக்கவில்லை என அதிருப்தி அடைவர். இவர்கள் ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் முதல் திகதியன்று காலையில் நீராடுவதற்கு முன் மூன்று வெண்மை வண்ண வாளியில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்த நீரில் புதினா இலையை கொதிக்க வைத்த நீரையும், ஜாதிக்காய் பொடியையும் மூன்று வாளியிலும் கலந்து அதில் நீராட வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் ஆங்கில மாதத்தின் முதல்  திகதியன்று இதனை பின்பற்றலாம். தமிழ் மாதத்தின் முதல் திகதியன்றும் இதனை பின்பற்றலாம் .

இதனை ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாள் அன்று மேற்கொள்ளும் போது பண வரவிற்கான தடை அகன்று தன வரவு தாராளமாக வருகை தரும். இதனையும் முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு மாதமும் ஆண்டு முழுவதும் செய்து வந்தால் சில ஆண்டுகளில் உங்களுடைய தன வரவில் மிகப்பெரிய மாற்றத்தை காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37