நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

17 Jan, 2025 | 02:49 PM
image

காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் உடுகம மற்றும் நாகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, கைதிகள் இருவரும் வழக்கு விசாரணைக்காக உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர், கைதிகள் இருவரும் வழக்கு விசாரணையை முடித்துவிட்டு காலி சிறைச்சாலைக்கு மீண்டும் செல்வதற்காக சிறைச்சாலை பஸ்ஸில் ஏற முயன்ற போது சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலிதக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12