மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும், தற்போது நாம் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. நீர்ப்பாசன திட்டங்களில் சில குறைபாடுகள் இருப்பதனால் பெரிய நீர்ப்பாசன திட்ட வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
முந்தனையாறு திட்டத்துக்கு குறைந்த அளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருந்தபோதும் அத்தகைய திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்த சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் தற்போது நாம் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் மாற்றி எமது வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.
எமது அரசாங்கத்தின் நோக்கமான “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் ஊடாகவும் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் மட்டுமன்றி, சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
பொருளாதாரத்தில் பின் நின்ற அரசாங்கத்தை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அதனூடாக எமது நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம்.
மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் கட்டடங்களை புனரமைத்து அறுவடை செய்கின்ற வேளாண்மையை களஞ்சியப்படுத்தவேண்டிய நிதிகளை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அவற்றுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM