நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலி நெலுவ  பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.