அமெரிக்காவில் பணபலம் படைத்த ஆதிக்ககுழுவொன்று உருவாகிவருவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மிகஅதிகளவு செல்வத்தையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று உருவாகிவருகின்றது,அவர்களின் செல்வாக்கு எங்களின் ஜனநாயகத்திற்கும்,அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அதி செல்வந்த தொழில்நுட்ப- தொழில்துறை குறித்து தனது உரையில்82 வயது பைடன் எச்சரித்துள்ளார்.
வெள்ளைமாளிகையிலிருந்து தனது இறுதி தொலைக்காட்சி உரையை ஆற்றிய பைடன் காலநிலை மாற்றம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவல் குறித்து எச்சரித்துள்ளார்.
தனது உரையில் தனது ஆட்சியின் சாதனைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜோபைடன் ,தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டமை,உள்கட்டமைப்பு, சுகாதார செலவீனங்கள், நாட்டை பெருந்தொற்றின் பிடியிலிருந்து விடுவித்தது போன்றவை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் செயல்களின் பலாபலன்களை உணர்வதற்கு அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் ஆனால் விதைகளை விதைத்துள்ளோம் என பைடன் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM