நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 99 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் உடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.