கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிரேஸ்ர ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது 15ஆம் திகதி புதன்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாஸ்கரனை தலைக்கவசத்தால் தலையில் தாக்கப்பட்டது. தொடர்பாகவும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்தை பொலிசார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரண்டு சந்தேக நபர்களை புதன்கிழமை (15) கைது செய்திருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை பொலிசார் திசை திருப்பும் நோக்கில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எதிராக புதன்கிழமை (15) மாலை போலியான முறைப்பட்டை பதிவு செய்து கொண்டதுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பேரில் ஒருவரை குறித்த சம்பவத்திலிருந்து விடுவித்து மற்றைய ஒருவரையே வியாழக்கிழமை (16) மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதனை அடுத்து வியாழக்கிழமை (16) மாலை இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கடமையிலுள்ள பதில் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக நடந்த விடயத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரியதுடன் குறித்த விடயம் தொடர்பாக மீள முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிதையடுத்து் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மற்றைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM