30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் - சமன் ரத்னப்பிரிய

Published By: Vishnu

17 Jan, 2025 | 04:35 AM
image

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பரிசோதனை செய்து விடுவிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. விடயத்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் துறைமுக நிலைமைய கண்காணிக்க வந்தபோது, கொழும்பு துறைமுகத்துக்கு வந்த 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

ஆனால் 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

துறைகத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்களை கொண்டுசெல்ல வந்திருக்கும் பார ஊர்திகள் பல நாட்களாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து, துறைமுக ஊழியர்கள்  24 மணிநேரம் வேலை செய்து பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் கலந்துரையாடல் இடம்பெற்று ஒருவார காலம் கடந்துள்ள நிவையில் இன்னும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போயிருப்பதால் 17 கொள்கலன்கள் துறைமுகத்துக்குள் இறுகி இருப்பதாக வெளிவரும் தரவுகள் மூலம் தெரியவருகிறது. அதேபோன்று கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-10 06:00:05
news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46