மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலே உயிரிழந்த நிலையில் இந்த யானை மீட்கப்பட்டுள்ளது.
இவ் யானைக்கு சுமார் 30 தொடக்கம் 35 வயது இருக்கும் எனவும் வயல் பகுதிக்குள் சேதுமாக்கிய பின்னரே இந்த யானை இறந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வந்து பார்வையிட்டதன் பின்னர் யானையின் உயிரிழப்பு தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கால்நடை வைத்தியர்கள் இறந்த யானையை பரிசோதனை செய்த பின்னர் அதனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
யானை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் கால்நடை வைத்திய பிரிவின் பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM