சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் - ஐக்கிய தேசிய கட்சி

Published By: Digital Desk 2

16 Jan, 2025 | 07:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்த நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் இன்னும் நாட்டுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலங்களில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டதுடன் அந்த ஒப்பந்தங்களின் நன்மைகள் தொடர்பில் அரசாங்க ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவது வழமை. ஆனால் அவ்வாறான எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

ஆனால் அரசாங்கம் சீனாவுடன் 15 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. அதனால் அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ  அலுவலகத்தில்  ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 12:47:46
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57
news-image

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்...

2025-02-16 12:26:15
news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2025-02-16 12:25:19
news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20
news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57