எகிப்தில், குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு சுமார் 220 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மின்யா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

‘கொப்ட்’ எனப்படும் கிறிஸ்தவப் பிரிவினர் எகிப்தின் பிரதான கிறிஸ்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொப்ட் பிரிவு கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இத்தாக்குதலும் கருதப்படுகிறது. எனினும் இதுவரை இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்கவில்லை.

இச்சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் ஸிஸி, இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.