தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

Published By: Digital Desk 2

16 Jan, 2025 | 08:12 PM
image

எம்மில் சிலர் நண்பர்களிடமோ அல்லது வங்கிகளிடமிருந்தோ அல்லது புலம்பெயர்ந்து மேலத்தேய நாட்டில் வசிக்கும் உறவினர்களிடமிருந்தோ ஓரளவிற்கு நிதி உதவி பெற்று தங்களுக்கு தெரிந்த தொழிலை சிறிய அளவில் தொடங்கி இருப்பார்கள். 

தொடக்கத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த தொழில் விவரிக்க இயலாத பல காரணங்களால் தடை பட்டிருக்கும். தொழில் மூலம் கிடைத்து வந்த லாபமும் குறைந்து , கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத கஷ்டமான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு நஷ்டத்தில் கூட தொடர்ந்து தொழில் நடத்த இயலாத நிலை உருவாகும்.  

வேறு சிலருக்கு தொழிலை கைவிட்டு வேறு ஏதேனும் வேலைக்கு செல்லலாமா! என்ற எண்ணம் கூட உதயமாகும். இவர்கள் அனைவரும் தங்களுடைய தொழிலில் ஏற்பட்டிருக்கும் மாய அல்லது சூட்சமமான தடையை குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 

சிலர் இது தொடர்பாக ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு பரிகாரத்தை முழுமையாகவோ அல்லது முழு நம்பிக்கையுடனும் செய்திருக்க மாட்டார்கள். இதனால் அவர்களுடைய தொழிலில் தடை என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஆரம்பித்த தொழிலில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ அல்லது தொழில் மூலமாக வரவேண்டிய வருவாய் குறைந்தாலோ அதிலிருந்து மீள்வதற்கான எளிய வழிமுறைகளை வழங்கி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : கருப்பு எள் , வெந்தயம் , இந்துப்பு , வெண்மை வண்ண சதுர வடிவிலான துணி, 11 ரூபாய் நாணயங்கள்

மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை கைப்பிடி அளவிற்கு வாங்கி வைத்துக் கொண்டு, சனிக்கிழமையன்று அதனை வெண்மை வண்ண சதுர வடிவிலான துணியில் வைத்திட வேண்டும். அதனுடன் 11 ரூபாய் நாணயங்களையும் (ஒரு ரூபாய் நாணயமாக இருந்தால் சிறப்பு) வைத்திட வேண்டும். இதனை முடிச்சிட்டு பூஜை அறையின் தென்மேற்கு மூலையிலோ அல்லது உங்களின் வீட்டின் தென்மேற்கு மூலையிலோ வைத்து விட வேண்டும். 

அதனை அந்த திசையில் வைக்கும் பொழுது சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து 48 நாட்கள் நீங்கள் இதனை வழிபட்டால் 90 நாட்களுக்குள் உங்களுடைய தொழிலில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாக உடைந்து தொழில் சிறக்கும். உங்களுடைய தொழிலை உங்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக முடக்கியவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். அதன் பிறகு உங்களுக்கு பழைய நிலையில் தொழில் சிறந்து, அதனூடாக செல்வ வளம் கொழிக்கும்.

எம்மில் சிலர் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடலாமா? அல்லது உச்சரிக்க தான் வேண்டுமா? என சந்தேகம் எழுப்புவர். உங்களுடைய தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் நீங்கள் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க தான் வேண்டும்.

உங்களுடைய நினைவூட்டலுக்காக சனி பகவானின் காயத்ரி மந்திரம் இதோ

ஓ காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ பிரசோதயாத் !

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிஹ பிரசோதயாத் !

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனைச்சர பிரசோதயாத் !

ஓம் சனீஸ்வராய வித்மஹே

சாயாபுத்திராய தீமஹி

தந்நோ சனிஹ ப்ரசோதயாத் !

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32