ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம்

16 Jan, 2025 | 05:09 PM
image

அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது  “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஒரு அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் கருத்துகள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கம். மேலும் இந்த தீர்மானம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் தமிழர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் நம்ப முடியாத சாதனைகள் மீது ஔி வீசும் என மனதார நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 

இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06