நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: Digital Desk 2

16 Jan, 2025 | 05:05 PM
image

'அழகிய கண்ணே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் லியோ சிவகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டெலிவரி பாய் 'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூரி வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகி வரும் 'டெலிவரி பாய்' எனும் திரைப்படத்தில் லியோ சிவக்குமார், ராதிகா, காளி வெங்கட் , துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். 

வாடிக்கையாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருளை விநியோகம் செய்யும் ஊழியரின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை அசாசி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அமுதா லியோனி தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ள படக் குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் கதையின் நாயகனான லியோ சிவகுமார் , சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருளை விநியோகிக்கும் ஊழியராக தோன்றுவதால் ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதனிடையே நடிகர் லியோ சிவக்குமார், உலக தமிழர்களிடம் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளரும், தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருமான திண்டுக்கல் லியோனியின் வாரிசு என்பதும், 'அழகிய கண்ணே', 'கோழி பண்ணை செல்லத்துரை', 'சாமானியன்' ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் லியோ சிவகுமாருக்கு பொருத்தமான வாய்ப்பு கிடைக்காததால் 'டெலிவரி பாய்' எனும் படத்தினை அவரே சொந்தமாக தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right