எம்மில் சிலருக்கு தொடை பகுதியிலும், தோல் மடிப்பு பகுதியில் கொப்புளங்கள் தோன்றக்கூடும். அந்த கொப்புளங்களில் திரவம் நிறைந்திருக்கும். இதனை மருத்துவ மொழியில் புல்லஸ் பெம்பிகொய்ட் (Bullous Pemphigoid) என குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு வலியும் உண்டாகும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடை மற்றும் அக்குள் பகுதியில் சிலருக்கு திரவம் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும். இத்தகைய அரிய பாதிப்பு சிலருக்கு சில மாதங்களுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். வேறு சிலருக்கு இத்தகைய திரவம் நிறைந்த கொப்புளங்கள் குணமடைய ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். அரிப்புடன் கூடிய வலி மற்றும் அசௌகரியமான உணர்வு ஆகியவற்றின் காரணமாக இவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
தோல் பகுதியில் அரிப்பு ஏற்படுவது, சிறிய அளவிலான கொப்பளங்கள் உண்டாவது, சில இடங்களில் எளிதில் உடையாத அளவில் சற்று பெரிய கொப்புளங்கள் உருவாவது, வலி, அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மிக அரிதாக வாய் பகுதியிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவை தொற்று பாதிப்பு அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் நோய் எதிர்ப்பு திறன் தவறுதலாக எம்முடைய திசுக்களின் ஒரு அடுக்கினைத் தாக்கும்போது இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். அதே தருணத்தில் புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு பக்க விளைவாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம் என்றும், சொரியாசிஸ் டிமென்ஷியா, பார்க்கின்சன், பக்கவாதம் ஆகிய பாதிப்பிற்கும்.. இந்த புல்லஸ் பெம்பிகாய்டு எனும் தோல் பாதிப்பிற்கும் தொடர்பு உண்டு என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இதுபோன்ற அரிய தோல் பாதிப்பிற்கு குருதி பரிசோதனை, தோல் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருகிறார்கள். தற்போதைய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கான முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலருக்கு இத்தகைய மருந்தியல் சிகிச்சை ஓராண்டு வரை கூட நீடிக்கும். இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிந்துரைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
- வைத்தியர் தீப்தி
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM