ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணி

16 Jan, 2025 | 04:49 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் 'ட்ரெயின்' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'ட்ரெயின்' எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன், நாசர், யூகி சேது, நரேன், கே. எஸ். ரவிக்குமார்,  சம்பத் ராஜ்,  கலையரசன், இரா தயானந்த் , ப்ரீத்தி கரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். புகையிரத வண்டியை இயக்கும் சாரதியின் வாழ்வை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும் ஒரே தருணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு 'ட்ரெயின்' படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு நிமிட காணொளியில் 'கன்னக்குழி காரா..'  எனும் பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத, பின்னணி பாடகியும், நடிகையுமான சுருதிஹாசன் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலுக்கான காணொளியில் விஜய் சேதுபதி ஒரு பிரத்யேக காட்சிக்காக பின்னணி குரல் கொடுக்கும் காணொளியும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right