கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப் அலிகான் உயிருக்கு ஆபத்து இல்லை - வைத்தியசாலை 

Published By: Digital Desk 3

16 Jan, 2025 | 04:49 PM
image

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பிரபல பொலிவூட்  நடிகர் சயிப் அலிகான் உயிருக்கு ஆபத்து இல்லை என லீலாவதி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று வியாழக்கிழமை அதிகாலை  அடையாளம் தெரியாத சந்தேக நபரொருவர் நுழைந்துள்ளார். இதன் போது நடந்த சண்டையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி சயிப் அலிகான்காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நடிகர் சயிப் அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

சயிப் அலிகானுக்கு ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. ஒரு காயம் அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது என லீலாவதி வைத்தியசாலையின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சயிப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாகவும், நலமாக இருப்பதாகவும் லீலாவதி வைத்தியசாலை வைத்தியர் நிதின் டாங்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்ட சயிப் அலிகான் அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுத்தண்டில் கத்திக்குத்து ஏற்பட்டதால் அவருக்கு மார்பு முதுகுத்தண்டில் பெரும் காயம் ஏற்பட்டது. கத்தியை அகற்றி, கசிந்த முதுகெலும்பு திரவத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையில் இரண்டு ஆழமான காயங்களும், கழுத்தில் ஒரு ஆழமான காயமும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குழுவால் சரிசெய்யப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right