10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்து வருகின்றது.

இதன் முதற்கட்டமாக பத்தேகம மற்றும் பஸ்ஸர ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருடத்தில் 109 புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.