யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது.
இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன.
பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல் சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது.
அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM