தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்று புதன்கிழமை (15) வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவர் மீதுமே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பருத்தித்துறை- கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்? என கேட்டு , உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
அந்நபர் தொலைபேசியை துண்டித்து, சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுகு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று விடயங்களை ஆராய்ந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடமும் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலாளிகளை கைது செய்யுமாறு கோரினர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM