தென்னிந்திய திரையுலகில் லேடி சுப்பர் ஸ்டாரான அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'காதி' திரைப்படத்தில் அழுத்தமான வேடத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு 'காதி' படத்தில் விக்ரம் பிரபு தோன்றும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காதி' திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் , ஜான் விஜய், விடிவி கணேஷ் ,ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நாக வல்லி வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ஃப்ரேம் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் தேசி ராஜு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு தோன்றும் காட்சிகளின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விக்ரம் பிரபுவும், கதையின் நாயகியான அனுஷ்கா ஷெட்டியும் காவல் துறையினரின் தேடுதலுக்கு ஆளாகும் காட்சி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த காணொளியால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM