அருட்தந்தை பஸ்ரியன் கொல்லப்பட்டு 40 வருடங்கள் - இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை

Published By: Rajeeban

16 Jan, 2025 | 12:16 PM
image

ruki fernando

ஜனவரி ஆறாம் திகதி- அருட்தந்தை மேரி பஸ்ரியன்; மன்னாரில் கொல்லப்பட்டு 40 வருடங்களாகின்றன .

மேரி பஸ்டியன் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு.

அவரது உடலும் அவருக்கான கல்லறையும் இல்லாமல் அவர் நினைகூரப்படும் மற்றுமொரு வருடம் இது.

இந்த கொலை நடந்த அந்த நாட்களில் அரசாங்கம் அருட்தந்தை பஸ்ரியன் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருக்கலாம் என தெரிவித்தது.

கடந்த 40 வருடங்களாக அருட்தந்தை பஸ்ரியனின்   கொலை குறித்த உண்மைகளை இலங்கையின் எந்த அரசாங்கமும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் வித்தியசமாக செயற்படும் என்பதற்கான அறிகுறிகள் எவையும் இல்லை.

எனினும் வங்காலை மக்களை பொறுத்தவரை தங்கள் பாசத்திற்குரிய மதகுருவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.

வங்காலையில் இராணுவம் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தனது தந்தை கிறிஸ்தவ தேவாலயத்தி;ற்கு சென்றார் என தெரிவிக்கும் பெண்ணொருவர் 'எங்கள் குடும்பம் அச்சமடைந்திருந்ததால் அருட்தந்தை எங்களை தேவாலயத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார் நாங்கள் தேவாலயத்திற்கு சென்றவேளை அருட்தந்தை பஸ்ரியன் எங்களை தேவாலயத்திற்குள் சென்று மறைந்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்,"

'அதன் பின்னர் அருட்தந்தை தனது வீட்டிற்கு சென்றார்,நான் மறைந்திருந்தவேளை துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் ஐயோ அம்மா என்ற அலறலையும் கேட்டேன்,அது  அருட்தந்தையின் அலறல்."

'அதன் பின்னர் நாங்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து அருட்தந்தையின் உடலை - வெண்ணிற ஆடையில் - இராணுவம் கொண்டு செல்வதை பார்த்தோம்." என தெரிவிக்கின்றார்.

இதனை அந்த கிராமத்தை சேர்ந்த ஏனையவர்களும் உறுதி செய்கின்றனர்.சில சந்தர்ப்பங்களில் நினைவேந்தல் நிகழ்வில் அவர்கள் இதனை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.

1980 என்பது அந்த பகுதியை பொறுத்தவரை மிகவும் பயங்கரமான காலம்,இரத்தக்களறி நிறைந்த காலம்.

அருட்தந்தை பஸ்ரியன் பொதுமக்களை பாதுகாப்பதில் முன்னணியில் நின்றார்.

எனது மக்கள் ஒடுக்கப்பட்ட ,துயரமான, சலுகைகளை பெற்று வாழவேண்டிய நிலையில் உள்ளபோது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என அருட்தந்தை கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு கடிதமொன்றை  எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் தனது கடும் ஏமாற்றத்தையும் தெரிவித்திருந்த அவர் பொதுமக்கள் உயிரிழக்கும் போது நாங்கள் மதகுருக்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு சம்பவங்கள் அருட்தந்தையை கொலை செய்வதற்கு இராணுவத்தை தூண்டியிருக்கலாம்,முருங்கன் நகரில் இராணுவத்தினால் கொலை செய்யப்பட்ட பெருமளவு தமிழர்களின் உடல்களை அருட்தந்தை படமெடுத்திருந்தார்.

மேலும் அருட்தந்தை தன்னுடன் இணைந்து பணியாற்றிய வண ஜெயராஜசிங்கத்தின் உடலை புதை;திருந்தார்.இவர் 1983 டிசம்பரில் கொல்லப்பட்டார்.

இலங்கையில் மூன்று தசாப்தகால வடகிழக்கு யுத்தம்யுத்தம்  மற்றும் ஜேவிபியின் இரண்டு கிளர்ச்சிகள் போன்ற சூழமைவுகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பத்திரிகையாளர்கள்,கலைஞர்கள் , கத்தோலிக்க மதகுருமார் - ஒரு அருட்சகோதரி ஆகியோரும் உள்ளனர்.

உண்மையையும் நீதியையும் தேடுதல்

மிகவும் நேசிக்கப்பட்ட வெளிப்படையாக துணிச்சலாக கருத்து தெரிவித்து வந்த எல்சல்வடோர் மதகுரு பேராயர்  ஒஸ்கார் ரொமேரோ 1980 இல் கொல்லப்பட்டார், அவரது கொலைக்கு நீதி கிடைக்காத ஒரு சூழ்நிலை காணப்பட்டவேளை அமெரிக்க நீதிமன்றம் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட வழக்கொன்றினை தொடர்ந்து 2004 இல் இந்த கொலைக்கு விமானப்படை கப்டன் ஒருவரே காரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பேராயர் கொல்லப்பட்டு 40 வருடங்களின் பின்னர் எல்சல்வடோர் நீதிமன்றம் இந்த கொலை குறித்துவிசாரித்தது.

இதற்குஇடைப்பட்ட காலத்தில்,30வது வருட நினைவுதினத்தின் போது எல்சல்வடோர் ஜனாதிபதி இந்த கொலைக்காக முறைப்படி மன்னிப்பு கோரினார்.

இலங்கையில் புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும்,கடந்த கால குற்றங்களிற்காக நீதியை நிலைநாட்டப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.

எனினும் மேரி பஸ்டியன் மற்றும் ஏனைய மதகுருமார்,அருட்சகோதரி மற்றும் எண்ணிலடங்காத மக்களிற்கான நீதியும்,மன்னிப்பும், குற்றத்தை ஒப்புகொள்ளுதலும் இதுவரை காணக்கிடைக்காத விடயமாக உள்ளது.

மேரி பஸ்டியனின் கொலை குறித்து விசாரணை செய்வதற்காக 1985 இல் ஜனாதிபதி விசேடகுழுவை நியமித்த போதிலும்,அந்த குழுவின் விசாரணைகள் மூலம் தெரியவந்த விடயங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.

எதிர்காலத்தில் அது சாத்தியமா என்பது சந்தேகமே.

மேலே குறிப்பிட்டப்பட்ட அருட்சகோதரிகளும் அருட்சகோதரர்களும் வாழ்க்கையின் புனிதம்,உண்மை மற்றும்நீதியின் மீது கடுமையான அர்ப்பணிப்புடன் விளங்கினார்கள்.இந்த விழுமியங்களிற்காக அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை விலையாக கொடுத்தனர்.ஆனால் முரணான விதத்தில் இவர்களின் படுகொலைகள் காணாமல்போனமை  குறித்த உண்மை நீதிகள் இதுவரை சாத்தியமற்றவையாக காணப்படுகின்றன.

இந்த படுகொலைகள் காணமல்போதல் போன்றவற்றிற்காக நீதிகோருதல் என்பது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவ தலைவர்கள் உட்படஇது குறித்து மிகவும் மந்தகதியிலேயே பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right