அம்பாறையில் பலத்த மழை, வெள்ளத்தால் வயல் நிலங்கள் நாசம்! - விவசாயிகள் கவலை!

16 Jan, 2025 | 11:56 AM
image

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14)  திறந்துவிடப்பட்டபோதும் இடைவிடாத பலத்த மழை காரணமாகவும் அப்பகுதியில் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்  வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நாவிதன்வெளி  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கை நிலங்களில் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது வேளாண்மைக்கு 70 நாட்களே கொண்ட பயிர்களாக குடலைப் பருவத்தில் இருந்து கதிர் பருவத்துக்கு மாறும் இவ்வேளையில் மழை வீழ்ச்சி அதிகரிப்பு மற்றும் குளங்களிலிருந்தும் நீர் திறந்து விடப்பட்டமை முதலிய காரணங்களால் இப்பயிர்கள் நாசமாகி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 

கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் தாம் அதிகளவில் பாதிக்கப்பட்டு மீண்டெழ முடியாத நிலையில் இருக்கும்வேளையில் இவ்வருட ஆரம்பத்திலேயே அடுத்தொரு வெள்ள நிலைமை ஏற்பட்டு, அதனால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை, நெல்லுக்கான உத்தரவாத விலை இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில் தாம் எதிர்பார்த்த விளைச்சலை பெறுவதிலும் சிக்கல்கள் நிலவுவதாக விவசாயிகள் மேலும் ஆதங்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23