துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு நாள்

Published By: Rajeeban

16 Jan, 2025 | 07:09 AM
image

சிஎன்என்

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காசா நகரில் உள்ளபாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தினையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

நான் மிகவும் மகிழ்ச்சியாகயிருக்கின்றேன் அதேவேளை எனது வீடு முற்றாக அழிந்துவிட்டது,நான் எனது நான்கு பிள்ளைகளை பறிகொடுத்துள்ளேன் சில பிள்ளைகளை பல மாதங்களாக பார்க்கவில்லை என பெய்ட் லஹியாவை சேர்ந்த ஜவ்ஹர் அபி லைலா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தம் காரணமாக எனது பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியும் அதனால் மகிழ்ச்சியாக உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பெரும்துயரங்களை சந்தித்தோம் நாங்கள் முற்றாக களைப்படைந்துபோனோம் ஆனாலும் உயிர்தப்பினோம்,என தெரிவித்துள்ள அவர் நான் நொருங்கிய இதயத்துடனேயே வீடு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்த உடன்படிக்கை குறித்த செய்தி தனக்கு நம்பிக்கையையும் வேதனையும் ஏற்படுத்தியதாக பெயர் குறிப்பிடவிரும்பாத பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இழந்த விடயங்கள் துயரத்தை ஏற்படுத்துகின்றன, குடும்பங்கள் உறவினர்கள் நண்பர்கள்,காசாவிற்குமீண்டும் திரும்பலாம் எங்கள் பகுதிகளிற்கு மீண்டும் திரும்பலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சுஜயாவிலிருந்து இடம்பெயர்ந்த பெயர் குறிப்பிடாத பாலஸ்தீனியர் ஒருவர் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் ஆனால் இந்த மகிழ்ச்சி முழுமையானது இல்லை என தெரிவித்துள்ளார்.

நான் எனது தந்தையையும் சகோதரியையும் இழந்தேன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவே இதற்கு காரணம்,நாங்கள் எங்கு சென்று வாழப்போகின்றோம்,நான் வீட்டிற்கு சென்று ஒருவருடமாகின்றது மனிதாபிமான உதவிகள் வரும் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25