(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அணுகுமுறையை மிகவும் வலுவான பாதையில் அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்வது குறித்து கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கு விளக்கமளித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், அவரையும் உயர்ஸ்தானிகரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி (பெரும்பாலும்) தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அண்மையில் தாம் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புக்கள் குறித்தும், அச்சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை என்பவற்றை மிகவும் வலுவான பாதையில் அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரிவித்த அவர்கள், அவ்விடயங்கள் பற்றியும் விளக்கமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிறிதரன் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதியொருவர் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், பெரும்பாலும் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என சிறிதரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM