மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் இன்று (15) மாடுகளானது பட்டு வஸ்திரங்கள், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, மாட்டுப் பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன.
ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மக்களின் வாழ்வில் ஒன்றர கலந்த மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வணங்கி வழிபடும் நாளாக மாட்டுப் பொங்கல் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக, இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கான பூஜைகள் நடைபெற்றன.
“குலம் காக்கும் பசுவை காப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த பட்டிப்பொங்கல் வழிபாடுகள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. இதில் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM