(நெவில் அன்தனி)
ராஜ்கொட், சௌராஷ்த்ரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை நையப்புடைத்த இந்தியா 304 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாக சுவீகரித்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 5 விக்கெட்களை இழந்து 435 ஓட்டங்களைக் குவித்தது.
ப்ரத்திகா ராவல், அணித் தலைவர் ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி குவித்த அபார சதங்களும், ஆரம்ப விக்கெட்டில் 160 பந்துகளில் அவர்கள் பகிர்ந்த 233 ஓட்டங்களும் இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
ஸ்ம்ரித்தி மந்தனா 80 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 135 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ப்ரத்திகா ராவலுடன் 104 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிச்சா கோஷ் 59 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் தேஜால் ஹசாப்னிஸுடன் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த ப்ரத்திகா ராவல் 154 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
129 பந்துகளை எதிர்கொண்ட அவர் 20 பவுண்டறிகள். ஒரு சிக்ஸை விளாசியிருந்தார்.
மத்திய வரிசையில் ஹார்லீன் டியோல் 15 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜெமிமா ரொட்றிக்ஸ் 4 ஓட்டங்களுடனும் தீப்தி ஷர்மா 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 31.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சாரா ஃபோர்பஸ் 41 ஓட்டங்களையும் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 36 ஓட்டங்களையும் லீ போல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM