விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு

15 Jan, 2025 | 06:23 PM
image

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்பு உள்ள நடிகரான விமல் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பரமசிவன் பாத்திமா' எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமசிவன் பாத்திமா 'எனும் திரைப்படத்தில் விமல், சாயா தேவி, ஷிவதா, எம் .எஸ். பாஸ்கர், கூல் சுரேஷ், ஸ்ரீ ரஞ்சனி, 'காதல்' சுகுமார், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழக கிராம பகுதிகளில் எல்லை தெய்வமாக வணங்கப்படும்.. காவல் தெய்வங்களான 'பரமசிவம் பாத்திமா திருக்கோயில்' என்ற ஒரு காவல் தெய்வம் இருப்பது போன்றும்.. அதனை ஊர் மக்கள் காவல் காப்பது போன்றும் முதல் தோற்றப் பார்வை வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

இதனிடையே கடந்த ஆண்டு வெளியான 'சார்' எனும் திரைப்படத்தில் விமலும் , சாயா தேவியும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பதும், இந்தக் கூட்டணி மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதால் ஓரளவுக்கு கவனம் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right