அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

15 Jan, 2025 | 05:42 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறையையும் உணவு முறையையும் முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பல வகையினதான நோய்கள் அறிகுறி இல்லாமல் ஏற்படுகிறது. இந்த தருணத்தில் எம்மில் பலரும் தாங்க இயலாத நெஞ்சு வலி ஏற்பட்டு.. அதனை மாரடைப்பு என உணர்ந்து அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்வதை கண்டிருப்போம். கேட்டிருப்போம். ஆனால் தற்போது அறிகுறி ஏதும் இல்லாமலும் மாரடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்களுக்கும், 70 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் இதுபோன்ற அறிகுறியற்ற மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாததன் காரணமாக நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, குறிப்பாக இதயம் சார்ந்த நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அவை வலியை கடத்துவதில்லை.

கடுமையான நெஞ்சுவலி போன்ற அறிகுறி இல்லை என்றாலும்.. இத்தகைய பாதிப்பிற்கு சில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு திடீரென்று அதீத வியர்வை ஏற்படுவது, தலைசுற்றல், மயக்கம், சமச்சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல் இவை அனைத்தும் சில வினாடிகள் நேரம் வரையே ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு பல் வலி, கீழ் தாடை பகுதி வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி ஆகியவற்றின் காரணமாகவும் அறிகுறியற்ற மாரடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதுபோன்ற குறைந்த அளவிலான அறிகுறிகளையும் துல்லியமாக அவதானித்து அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள வைத்தியர்களிடம் விவரித்தால்... அவர்கள் குருதி பரிசோதனை, எக்கோ கார்டியோகிராம், எலக்ட்ரோ கார்டியோகிராம் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து ஓஞ்சியோகிராம் மூலம்  இதய பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை துல்லியமாக அவதானித்து, அதனை சீரமைப்பதற்கான நவீன மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்வார்கள். சிலருக்கு மட்டும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதனைத் தொடர்ந்து இதய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக மருந்தியல் சிகிச்சையை தொடர்வதுடன் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகிச்சையையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

- வைத்தியர் நந்தினி

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14