செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

15 Jan, 2025 | 05:39 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டோம். தந்தை, தாய், மகன், மகள் என அளவான குடும்பத்தை திட்டமிட்டு, வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இதில் சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி, அப்பம்மா, அப்பப்பா, அம்மாப்பா, அம்மம்மா, தாய்மாமன், அண்ணி, அண்ணன், கொழுந்தியாள் என ஏராளமான உறவுகளை சமூக நல்லிணக்கம், சமூக மேம்பாடு, ஆரோக்கியம், விலைவாசி உயர்வு என பல சமூக பொருளாதார காரணங்களால் குடும்பத்தின் அமைப்பையும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாம் சுருக்கி கொண்டிருக்கிறோம். இருந்தாலும் அன்பை பகிர்வதிலும், அன்பு செலுத்துவதிலும் நாம் என்றைக்கும் எம்முடைய பாரம்பரிய குணத்தையே கொண்டிருக்கிறோம்.‌

இதற்காக எம்முடைய முன்னோர்கள் காட்டிய வழிதான் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற கோட்பாடு. இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு செல்ல பிராணிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல பயனுள்ள குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக செல்லப் பிராணிகள் எம்முடன் உரையாடவில்லை என்றாலும்,  எம்முடைய உணர்வுகளையும் , மனநிலையையும் துல்லியமாக அவதானித்து, அதில் இருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் குணம் கொண்டவை. இதன் காரணத்தினாலேயே நாய் -பூனை- கிளி- என ஏராளமான செல்லப் பிராணிகளை ஆர்வத்துடன் வளர்க்கிறார்கள். ஆனால் இதனை எப்போது வாங்க வேண்டும் என்பதில் அறியாமை இன்னும் நீடிக்கிறது. பெரும்பாலானவர்கள் செல்லப்பிராணியை குட்டியாக இருக்கும் போதே வாங்கி விடுகிறார்கள்.  அதன் மீது அன்பு செலுத்தி வளர்க்கவும் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் இதற்கும் நாள் , நட்சத்திரம் உண்டு.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் எம்முடைய ஆன்மீக முன்னோர்களின் கூற்றுப்படி சம நோக்கு நட்சத்திரங்கள் என்றும், திரியக்முக் நட்சத்திரங்கள் என்றும் இவை சம நோக்கு நாட்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளை வாங்கலாம். இந்த பிரத்யேக நட்சத்திர நாளில் வாங்கும் செல்லப்பிராணிகளுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு உணர்வுபூர்வமானதாகவும், விவரிக்க இயலாத தனித்துவமான தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

இந்த நாட்களில் செல்லப்பிராணியை மட்டும் அல்லாமல் உங்களுக்காக உழைக்கும் துவி சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கலாம். மேலும் காமதேனு என்று குறிப்பிடப்படும் பசுவையும் இந்த நாட்களில் வாங்கி எம்முடைய வீடுகளுக்கு அழைத்து வந்தால் செல்வ வளம் பெருகுவதுடன் ஐஸ்வரியங்களும் வளரும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12