(நா.தனுஜா)
பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை (14) இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் இந்தியாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்புகளின் ஓரங்கமாக அமைந்திருக்கும் இவ்விரு நாள் (14 - 15) விஜயத்தின்போது, மிலிந்த மொரகொட இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைக்குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து பரந்;துபட்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடனான சந்திப்புக்களும் இதில் அடங்குகின்றன.
மிலிந்த மொரகொடவினால் நிறுவப்பட்ட பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் அமைப்பானது இந்திய அரசாங்கத்துடனும், ஏனைய சிந்தனைக்குழுக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் துறையினருடனும் நெருங்கிய பிணைப்பைப் பேணிவருவதுடன் தொடர் கலந்துரையாடல்களையும் நடத்திவருகின்றன.
அதன்படி இவ்வமைப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை முன்முயற்சிகள் நிலையமானது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அதன்படி தற்போது இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான கூட்டிணைந்த ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் இலங்கை, இலங்கை மற்றும் ஏனைய தொடர்புடைய நாடுகளை ஓரணிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பாத் ஃபைன்டர் அமைப்பு ஈடுபட்டுவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM