தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது சிவகங்கை தோப்பில் வளர்க்கப்படும் காளைகளும் பங்கேற்பதாக பெருமிதத்தோடு தெரிவித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தமிழகத்தில் பெண்கள் வளர்க்கும் காளைகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தனது தென்னந்தோப்பில் வைத்து தமிழக செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டத்தில் ஆளவிலாம்பட்டி அருகே கீழக்கோட்டையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமானின் தென்னந்தோப்பு அமைந்துள்ளது.
இன்று (15) அவரது தோப்பில் மாட்டுப் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
தமிழக பாரம்பரியத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட செந்தில் தொண்டமான் 14க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை சிவகங்கையில் உள்ள தனது தோப்பில் வளர்த்து வருகிறார்.
தமிழகத்தில் மிகச் சிறந்த 10 காளைகளில் இவரது காளைகளும் உள்ளடங்குகின்றன.
இன்றைய தினம் மாட்டுப் பொங்கல் விழாவினை முன்னிட்டு தனது தோப்பில் வளர்த்துவரும் காளைகளை நீராட்டி, மாலை, சந்தனம், குங்குமம் அணிவித்து, தனது குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் வைத்து, மாட்டுப் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடினார்.
அதன் பின்னர், தமிழ்நாட்டு செய்தியாளர்களை சந்தித்தவர் உலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழகமெங்கும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளும் பங்கேற்று வெற்றி பெறும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், தமிழகத்தில் பெண்கள் வளர்க்கும் மாடுகளும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதும் வரவேற்கத்தக்க விடயம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM