(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோகிராம் பச்சையரிசியை இலவசமாக விநியோகித்ததால் சந்தையில் சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடுவது முற்றிலும் பொய்.
அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார் என தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும் சிவப்பரிசி இல்லை.
விவசாயம் செழிப்பதற்காகவே இந்துக்கள் புத்தரிசியில் பொங்கல் பொங்குவார்கள். ஆனால் இம்முறை பெரும்பாலான பகுதிகளில் சிவப்பரிசிக்கு தட்டுப்பாடு நிலவியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 20 கிலோகிராம் சிவப்பு அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்ததால் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 20 கிலோகிராம் சிவப்பு அரிசி மாத்திரம் வழங்கப்படவில்லை. நாடு, வெள்ளை பச்சையரிசி வழங்கப்பட்டது.
அத்துடன் ஒட்டுமொத்த மக்களும் 20 கிலோ கிராம் அரிசி வழங்கப்படவில்லை. சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையிலும், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணம் வழங்கப்பட்டது.
அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடும் விடயங்கள் முற்றிலும் பொய்யானவை. பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு விலை நிர்ணயிப்பதிலும் பிரச்சினை காணப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM