இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு பிரதி அமைச்சருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு

15 Jan, 2025 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்து கலந்துரையாடினர். 

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த இருதரப்பு சந்திப்பின் போது, ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவின் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்குபற்ற பிரதி அமைச்சருக்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கப்பட்டது. 

இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு நாட்டு மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இந்தியாவின் தொடர்ச்சியான இராணுவ உதவிகளுக்கும் இதன் போது நன்றி தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டி, இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். 

இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57