பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

15 Jan, 2025 | 02:33 PM
image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கடந்த சனிக்கிழமை (11) ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் ஹங்வெல்ல - தும்மோதர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

தும்மோதர பிரதேசத்தில் வசிக்கும் 27, 28 மற்றும் 35 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணையில், 27 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் ஹங்வெல்ல,மீகொடை, அத்துருகிரிய,ஹோமாகம மற்றும் கொட்டாவை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 28 வயதுடைய சந்தேக நபர் திருடிய நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து நகைகள் , மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57