இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் “இசைக் கலைமணி” சண்முகநாதன் திபாகரன் இன்று (15) காலமானார்.
கொழும்பு கட்புல அரங்காற்றுகை கலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் யாழ். இராமநாதன் நுண்கலைக் கழகப் பட்டதாரி ஆவார்.
உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இணுவில் கிழக்கு மஞ்சத்தடி மற்றும் கொழும்பில் வசித்து வந்தார்.
அவரின் பூதவுடல் 16ஆம், 17ஆம் திகதிகளில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் எதிர்வரும் சனிக்கிழமை (18) இணுவில், மஞ்சத்தடியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
பல்வேறு இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்வுகள், பரதநாட்டிய அரங்கேற்றங்களில் வயலின் இசைக்கலைஞராக சிறப்புற பங்குபற்றிய சண்முகநாதன் திபாகரனின் மறைவுக்காக கலைஞர்களும் பல முக்கியஸ்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM