பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நிலுபுலீ லங்காபுர இன்று புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
"பியுமா" இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM