யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை போர்புரியப்போவதில்லை - இஸ்ரேலிய இராணுவவீரர்கள் போர்க்கொடி

Published By: Rajeeban

15 Jan, 2025 | 12:31 PM
image

telegraph.co.uk

காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும்வரை யுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என இஸ்ரேலிய படையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சுமார் 200 இஸ்ரேலிய படையினர் இது குறித்து கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில் 15 மாதத்தில் யுத்தம் ஒழுக்க நெறி  குறித்த எல்லைகளை மீறிவிட்டது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.யுத்த நிறுத்த உடனபடிக்கையில் கைச்சாத்திடாவிட்டால் நாங்கள் போரில் ஈடுபடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏழு இஸ்ரேலிய படையினர் ஏற்கனவே தங்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர் அவர்கள் இது குறித்து  ஏபி செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படுகின்றனர் வீடுகள் அழிக்கப்படுகின்றன இஸ்ரேலிய படையினருக்கு ஆபத்து இல்லாத போதிலும் இது இடம்பெறுகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யுத்த சூன்ய பிரதேசத்தில் அனுமதிவழங்கப்படாத எவரையும் சுட்டுக்கொல்லுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் வில்க் என்ற அதிகாரியொருவர் தான் இராணுவத்தில் தொடர்ந்தும் பணிபுரியப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இரண்டுமாதகாலம் பணியாற்றியவேளை தனது படையினர் வீடுகளை அழிப்பதை சூறையாடுவதையும்,காசா மக்களின் உடமைகளை நினைவுப்பொருட்களாக திருடுவதையும் பார்த்த பின்னர் 2024 ஜனவரியில் தனது பதவியை துறந்ததாக யுவல் கிறீன் என்ற 27 வயது அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிருப்தியடைந்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சிறியதாக தோன்றினாலும்; உண்மையில் மேலும் பலர் அதிருப்தியடைந்துள்ளனர் அவர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புகின்றனர் என இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படும் சூழலிலேயே  யுத்த நிறுத்தம் அவசியம் என இஸ்ரேலிய இராணுவத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15